Map Graph

மாதவரம் பால் காலனி

மாதவரம் பால் காலனி சென்னை மாவட்டம், மாதவரம் வட்டம், சென்னை மாநகராட்சியின் வடக்கில் அமைந்த மாதவரம் மண்டலத்தில் அமைந்துள்ளது. சென்னை வடக்கு பகுதியில் உள்ள மாதவரம் பால் பண்ணை காலனியில் 5000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றர். சென்னையில் முதல் கூட்டுறவு பால் உற்பத்தி தொழிற்சங்கம் அமைக்கப்பட்டதன் காரணமாக, இந்த இடம் மாதாவரம் பால் காலனி என்று அழைக்கப்பட்டது. ஒரு பெரிய மருந்து நிறுவமான ரெட்டார் லேபாரட்டரி மற்றும் மெடிமிக்ஸ் மூலிகை சோப் உற்பத்தி நிறுவனமும் இங்கு உள்ளது. கூடுதலாக, பனை திட்டம் மற்றும் தோட்டக்கலை சங்கம் இங்கு அமைந்துள்ளது. பால் காலனியில் உள்ள உள்நாட்டு விலங்குகள் பூங்கா சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள குழந்தைகளின் ஈர்ப்பு ஆகும்.

Read article